search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்"

    • 2-வது கிராண்ட்சிலாம் பட்டத்துக்காக 25 வயதான ஷபலென்கா காத்திருக்கிறார்.
    • 27 வயதான ஜெங் முதல்முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டியில் ஆடுகிறார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று பிற்பகலில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனும், 2-வது வரிசையில் உள்ளவருமான சபலென்கா (பெலாராஸ்)-சீனாவை சேர்ந்த 12-ம் நிலை வீராங்கனையான ஜெங் மோதுகிறார்கள்.

    சபலென்கா ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஒரு செட்டையும் இழக்காமல் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளார். 2-வது கிராண்ட்சிலாம் பட்டத்துக்காக 25 வயதான சபலென்கா காத்திருக்கிறார். கடந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனை வென்ற அவர் அமெரிக்க ஓபன் இறுதி ஆட்டத்திலும், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் அரை இறுதியிலும் தோற்று இருந்தார்.

    சபலென்காவுக்கு எல்லா வகையிலும் ஜெங் ஈடு கொடுத்து விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 27 வயதான அவர் முதல்முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டியில் ஆடுகிறார்.

    ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நாளை நடக்கிறது. இதில் 3-வது வரிசையில் இருக்கும் மெட்வதேவ் (ரஷியா-நான்காம் நிலை வீரான சின்னர் (இத்தாலி) மோதுகிறார்கள்.

    மெட்வதேவ் 2-வது கிராண்ட்சிலாம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். ஜோகோவிச்சை அதிர்ச்சிகரமாக வீழ்த்திய சின்னர் முதல் முறையாக கிராண்ட் சிலாம் இறுதிப்போட்டியில் விளையாடுகிறார்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஆண்ட்ரே ரூப்லெவ்- செபாஸ்டியன் கோர்டாவுடன் மோதினார்.
    • 3-வது சுற்று ஒன்றில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்- தாமஸ் மார்ட்டின் எட்செவரியுடன் மோதினார்.

    மெல்போர்ன்:

    ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவுடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ரூப்லெவ் 6-2, 7-6 ( 8-6), 6-4 என்ற செட் கணக்கில் செபாஸ்டியன் கோர்டாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். வரும் 21ம் தேதி நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை ரூப்லெவ் எதிர்கொள்ள உள்ளார்.

    மற்றொரு 3-வது சுற்று ஒன்றில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் (செர்பியா), தாமஸ் மார்ட்டின் எட்செவரி (அர்ஜென்டினா) உடன் மோதினார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 6-3 மற்றும் 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச்சின் 100-வது போட்டியாக அமைந்துள்ளது. 100 போட்டிகளில் விளையாடியுள்ள ஜோகோவிச் அதில் 92-ல் வெற்றி பெற்றுள்ளார்.

    • 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரசின் சபலென்சா-உக்ரைனின் சுரென்கோ மோதினர்.
    • மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் அனிசிமோலா வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரசின் சபலென்சா-உக்ரைனின் சுரென்கோ மோதினர்.

    இதில் சபலென்கா 6-0, 6-0 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் அனிசிமோவா வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-ம் சுற்று ஆட்டத்தில் இத்தாலியின் சின்னர் 6-0, 6-1, 6-3 என்ற நேர்செட் கணக்கில் அர்ஜென்டினாவின் செபாஸ்டியன் பேசை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • கவூப் 7-6 (7-2) 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    • ரஷியாவை சேர்ந்த மிர்ரா ஆண்ட்ரீவா 6-0, 6-2 என்ற நேர்செட் கணக்கில் ஜபேரை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் 4-வது வரிசையில் உள்ள கோகோ கவூப் (அமெரிக்கா) சக நாட்டை சேர்ந்த கரோலின் டோனி ஹைடை எதிர்கொண்டார்.

    இதில் கவூப் 7-6 (7-2) 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டத்தில் மினாவூர், ஹண்டர் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    6-வது வரிசையில் இருக்கும் ஒனஸ் ஜபேர் (துனிசியா) 2-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். ரஷியாவை சேர்ந்த மிர்ரா ஆண்ட்ரீவா 6-0, 6-2 என்ற நேர்செட் கணக்கில் ஜபேரை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலினா வோஸ்னியாக்கியும் (டென்மார்க்) 2-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது வரிசையில் உள்ள சின்னர் (இத்தாலி) 2-வது சுற்றில் நெதர்லாந்தை சேர்ந்த ஜெஸ்பர் டி ஜாங்கை எதிர்கொண்டார். இதில் சின்னர் 6-2, 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்றார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது வரிசையில் உள்ள ஜானிக்ஸ் ஷின்னர் (இத்தாலி) தொடக்க சுற்றில் நெதர்லாந்தை சேர்ந்த போடிக் வான்டேவை எதிர் கொண்டார்.

    மெல்போர்ன்:

    இந்த ஆண்டின் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது வரிசையில் உள்ள ஜானிக்ஸ் ஷின்னர் (இத்தாலி) தொடக்க சுற்றில் நெதர்லாந்தை சேர்ந்த போடிக் வான்டேவை எதிர் கொண்டார்.

    இதில் ஷின்னர் 6-4, 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் மேட்டோ அர்னால்டி (இத்தாலி), ஜெவுமி முனார் (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஆட்டங்களில் 9-வது வரிசையில் உள்ள பார்பரா (செக் குடியரசு), லெசியா (உக்ரைன்) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடங்க உள்ளது.
    • ஜோகோவிச் கிரிக்கெட் விளையாடினார்.

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் மெல்போர்ன் பூங்காவில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சுடன் நட்புரீதியான டென்னிஸ் விளையாடி அசத்தினார்.

    இரு நட்சத்திரங்களுக்கு இடையேயான டென்னிஸ் போட்டியானது ஆஸ்திரேலிய ஓபன் 2024- க்கு ஒரு முன்னோடியாக திகழும்.

    ஸ்மித் கிரிக்கெட்டில் பெயர் பெற்றவர் என்றாலும், அவர் ஜோகோவிச்சின் ஒரு சர்வீஸை தாக்கு பிடிப்பாரா என்ற கோணத்தில் ரசிகர்கள் எதிர் நோக்கி இருந்தனர். அனைவரின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அவரது சர்வீஸை ஸ்மித் கோர்ட்டிற்குள் திருப்பி அனுப்பினார். இது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனை கண்ட ஜோகோவிச் கூட அதிர்ச்சியடைந்தார். கூட்டத்தில் இருந்த ரசிகர்களின் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் ஸ்மித்க்கு தலைவணங்கி தனது பாராட்டை ஜோகோவிச் வெளிப்படுத்தினார்.

    அதன்பிறகு ஜோகோவிச் கிரிக்கெட் விளையாடினார். அவர் முதல் பந்தை அடிக்க முற்பட்டார். அது பேட்டில் படவில்லை. உடனே அடுத்து பந்து போடப்பட்டது. பேட் நமக்கு செட் ஆகாது என தெரிந்து கொண்ட ஜோகோவிச் மறைத்து வைத்திருந்த டென்னிஸ் மட்டையால் பந்தை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

    இவர்கள் இருவரும் டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • காயத்தால் ஏறக்குறைய ஓராண்டு நடால் சர்வதேச டென்னிஸ் போட்டியில் விளையாடவில்லை.
    • மெல்போர்ன் ரசிகர்கள் முன் விளையாட இயலாமல் போவது வருத்தம் அளிக்கிறது என நடால் தெரிவித்தார்.

    மெல்போர்ன்:

    முன்னாள் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்ததால் ஏறக்குறைய ஓராண்டு சர்வதேச டென்னிஸ் விளையாடவில்லை. பிரிஸ்பேன் டென்னிஸ் மூலம் மறுபிரவேசம் செய்த அவர் கால்இறுதியில் ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டான் தாம்சனிடம் தோற்று வெளியேறினார்.

    இந்த ஆட்டத்தின் போது 37 வயதான நடால் மீண்டும் காயத்தில் சிக்கினார். பரிசோதனையில் தசைநாரில் மிக நுண்ணிய கிழிவு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் வருகிற 14-ந்தேதி மெல்போர்னில் தொடங்கும் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

    இது குறித்து நடால் கூறுகையில் 'நல்லவேளையாக ஏற்கனவே காயம் ஏற்பட்ட இடத்தில் பிரச்சினை இல்லை. ஆனாலும் தற்போது 5 செட் வரை தாக்குப்பிடித்து விளையாடும் அளவுக்கு தயாராக முடியாது. அதனால் தாயகம் திரும்பி, எனது டாக்டரை கலந்தாலோசித்து சிகிச்சை மற்றும் ஓய்வு எடுக்க உள்ளேன். உற்சாகமான ஆதரவு அளிக்கும் மெல்போர்ன் ரசிகர்கள் முன் விளையாட இயலாமல் போவது வருத்தம் அளிக்கிறது' என்றார். 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான நடால், 2009, 2022-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபனை வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, ரிபாகினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவுடன் மோதினார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ரிபாகினா 6-4 என வென்றார். இதையடுத்து சுதாரித்துக் கொன சபலென்கா அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் அரையிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.
    • இதில் ஜோகோவிச், அமெரிக்க வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று போட்டி ஒன்றில் செர்பிய வீரரான ஜோகோவிச், அமெரிக்க வீரரான டாமி பாலுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 7-5, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், ரஷிய வீரர் காரென் கச்சனாவுடன் மோதினார். இதில் சிட்சிபாஸ் 7-6, 6-4, என முதல் இரு செட்களை கைப்பற்றினார். 3வது செட்டை 7-6 என கச்சனாவ் கைப்பற்றினார். 4வது செட்டை சிட்சிபாஸ் 6-3 என கைப்பற்றி  இறுதிக்கு முன்னேறினார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.
    • இதில் ஜோகோவிச், ரூப்லவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ம் தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

    இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டி ஒன்றில் செர்பிய வீரரான ஜோகோவிச்,ரஷிய வீரரான ஆண்ட்ரூ ரூப்லெவுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், அமெரிக்காவின் டாமி பால், அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் மோதினார். இதில் டாமி பால் 7-6, 6-3 என முதல் இரு செட்களை கைப்பற்றினார். 3வது செட்டை 7-5 என ஷெல்டன் கைப்பற்றினார். 4வது செட்டை டாமி பால் 6-4 என கைப்பற்றி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • நடப்பு விம்பிள்டன் சாம்பியனான எலெனா ரைபகினா அரையிறுதியில் அசரென்காவை வென்றார்.
    • சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில், நடப்பு விம்பிள்டன் சாம்பியனான கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபகினா, பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா மோதினர்.

    இப்போட்டியில் 7-6 (4), 6-3 என்ற செட்கணக்கில் ரைபகினா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் ரைபகினா.

    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் நாட்டின் அரினா சபலெங்கா, 7-6, 6-2 என்ற செட்கணக்கில் போலந்தின் மட்கா லினட்டை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

    சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதில், எலெனா ரைபகினா, 5ம் தரநிலை வீராங்கனையான அரினா சபலெங்காவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். 

    • மக்டா லினெட் (போலந்து) 6-3, 7-5 என்ற கணக்கில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி முதல் முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
    • ஷபலென்கா 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 5-வது வரிசையில் உள்ள அர்யனா ஷபலென்கா (பெலாரஸ்)-டோனா வெகிச் (குரோஷியா) மோதினார்கள்.

    இதில் ஷபலென்கா 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 49 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    24 வயதான ஷபலென்கா முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறார். இதற்கு முன்பு 4-வது சுற்று வரை தகுதி பெற்று இருந்தார். ஒட்டு மொத்த கிராண்ட்சிலாம் போட்டிகளில் 4-வது முறையாக அரை இறுதியில் விளையாடுகிறார். விம்பிள்டனில் 2021 ஆண்டும், அமெரிக்க ஓபனில் 2021, 2022-ம் ஆண்டும் அவர் அரை இறுதிக்கு தகுதி பெற்று இருந்தார்.

    மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 30-வது வரிசையில் உள்ள கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) அதிர்ச்சிகரமாக தோற்றார். அவர் 7-வது முறையாக கிராண்ட்சிலாம் கால் இறுதியில் தோற்றுள்ளார்.

    45-வது வரிசையில் இருக்கும் மக்டா லினெட் (போலந்து) 6-3, 7-5 என்ற கணக்கில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி முதல் முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

    அவர் அரை இறுதியில் ஷபலென்காவை சந்திக்கிறார்.

    ×